அறிமுகம்
கல்வி என்பது ஒரு குழந்தை அல்லது பெரியவர் தகவல், திறமை, செயல்திறம் மற்றும் சிறந்த அணுகுமுறையை அடையும் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட பாடமாகும். அது ஒரு தனிமனிதனை பண்பட்டவனாகவும், மெருகூட்டப்பட்டவனாகவும், நாகரிகமானவனாகவும், அறிவுடையவனாகவும் ஆக்குகிறது. உண்மையான கல்வி என்பது அறிவாற்றல், உணர்ச்சி மற்றும் உள இயக்கம் (உடல், மன, சமூக, தார்மீக (ஆன்மீகம்)) மற்றும் அழகியல் திறன்கள்,அர்ப்பணிப்பு சேவை வாழ்க்கைக்கான ஒட்டு மொத்த வளர்ச்சியாகும்.
பொருளாதாரம் என்பது ஆரம்பத்தில் அரசியல் பொரளாதாரம் என்று அழைக்கப்பட்ட இந்த இயலானது பத்தொன்பதாம் நூற்றாண்டில் பொருளியல் என்று ஆல்பிரட் மார்ஷல் அவர்களால் மாற்றம் செய்யப்பட்டது. பொருட்களின் உற்பத்தி, விநியோகம் மற்றும் பயன்பாட்டை பற்றியது. அதாவது ஒரு நாட்டின் அல்லது பல்வேறுபட்ட உலக நாடுகளில் நடைபெறும் உற்பத்தி முறைகள், விநியோகங்கள், கொடுக்கல் வாங்கல்கள், நுகர்வு மற்றும் சேமிப்பு போன்ற அனைத்து நடவடிக்கைகளையும் கொண்டு செயற்படும் செயற்பாடே பொருளாதாரம் எனப்படும்.
கல்வி ஒரு பொருளாதாரப் பண்டமாகவும் கல்வித்துறை ஒரு பொருளாதார துறையாகவும் இன்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. கல்வியினால் தேசிய அபிவிருத்திக்கு உதவக்கூடிய பல்வேறு வகையான மனித வளத்தை உருவாக்கமுடியும் என்றும் ஊட்டம், சுகாதாரம் என்பன கல்வியுடன் இணைந்து ஒரு பூரணமான மனிதவள அபிவிருத்திக்கு உதவமுடியும் என்றும் கல்விப் பொருளியலாளர் நம்புகின்றனர்.
பொருளாதார நிபுணர்கள் கல்வியையும் பொருளாதாரக் கொள்கைகள், எண்ணக்கருக்கள், மூலாதாரத் தத்துவங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் பகுப்பாய்வு செய்யவும், ஆராயவும், விசாரிக்கவும், உருவமைக்கவும் முயற்சித்ததன் காரணமாகவே கல்வி அபிவிருத்திச் செயற்பாடுகள் பொருளாதார இலக்கை அடிப்படையாகக் கொண்டிருந்ததால் பொருளியலின் தந்தை என கருதப்படும் அடம் ஸ்மித் (யுனழஅ ளுஅைவா, 1973) இன் காலத்திலிருந்த கல்விக்கும் பொருளாதாரத்திற்கும் இடையில் தெளிவான தொடர்பு உண்டு என எடுத்துக்காட்டப்பட்டபோதிலும் அண்மைக்கால பொருளியல் நிபுணர்களான ஜோன் வைஸே, பிலிப்ஸ், தியோடர் சூல்ட்ஸ் போன்றவர்கள் காலத்திலேயே இத்தொடர்பு பற்றி மிகவும் மனங்கவரக்கூடிய விதத்திலும் வெளிப்படையாகவும் சமர்ப்பிக்கப்பட்டது. விசேடமாக சுமார் 1950 தசாப்தத்தின் நடு அரைப்பகுதியின் பின்னர் கல்விக்கும் பொருளாதரத்திற்கும் இடையில் உள்ள நெருங்கிய தொடர்பினை விளக்கும் பல நூல்கள் இவர்களால் எழுதப்பட்டன. அதனால், கல்வியின் பொருளாதார பின்னணி எனும் பெயரால் ஒரு தனித்தறை கல்வியோடு சேர்ந்தது.
கல்வியை ஒரு பொருளாதார நடவடிக்கையாக பகுப்பாய்வு செய்ய முற்பட்டதால் கல்வியும் ஏனைய ஒரு பொருளாதார நடவடிக்கையின் நிலைக்குள்ளாகும் என எதிர்பார்க்கப்பட்டது. கல்வியை ஒரு உள்ளிடுகை வெளியிடுகை செயன்முறையாகவும் கருதினர். கல்வியையும் ஒரு முதலீட்டு நடவடிக்கையாக கருதிச் செயற்பட முயற்சிக்கப்பட்டது. கல்விக்காக ஈடுபடுத்தும் வளங்களை சிக்கனமாக, விரையமாகாது வீணாவதைத் தவிர்த்து உச்ச பயனைப் பெற்றுக்கொள்ளத் தக்கவாறு செயற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பது எடுத்துக் காட்டப்பட்டது.
பிரச்சினைக் கூற்று - கல்வி பொருளாதாரத்தின் மீதும் பொருளாதாரம் கல்வி மீதும் எவ்வாறு ஒன்றிலொன்று தங்கியுள்ளது என்பதனையும் இவற்றுக்கு இடையிலான தொடர்பு பற்றியும் ஆராய வேண்டியுள்ளது.
பிரச்சினை பகுப்பாய்வு - அடம் ஸ்மித் காலத்திருந்தே கல்விக்கும் பொருளியலுக்குமிடையில் நெருங்கிய தொடர்பு இருக்கின்றதென கூறப்பட்டிருந்த போதிலும் மேலே குறிப்பிட்ட அண்மைக்கால பொருளியல் அறிஞர்கள் அது தொடர்பாக வெளிப்படையாக எடுத்துக்காட்டும் வரை கல்வி ஒரு நுகர்வுச் செயலாகவே கூடுதலாக கருதப்பட்டு வந்தது. கல்வி முன்னேற்றம் அபிவிருத்தியை ஏற்படுத்த வேண்டுமானால் முதலில் பொருளாதார முன்னேற்றத்தை அதிகரித்துக் கொள்ள வேண்டும். பொருளாதார முன்னேற்றம் ஏற்படுகின்ற அளவிற்கு கல்வியில் தரத்திலும் அளவிலும் முன்னேற்றத்தை ஏற்படுத்திக் கொள்ள முடியும். பொருளாதார அபிவிருத்தி ஏற்படாதபோது கல்வியில் உள்ளிடப்படும் வளம் குன்றும். அதன் வளர்ச்சிக்காக வளங்களை உள்ளீடு செய்த தேசிய அரசுகள் கூட ஆரம்ப கால கட்டங்களில் தங்கியுள்ளன என்பது கல்வி வரலாற்றைப் பார்க்கும்போது தெளிவாகின்றது.
கல்வியின் பொருளாதாரப் பின்னணி என்னும் துறை தோன்றி விரிவடைந்ததன் விளைவாக கல்வி நுகர்வுச் செயற்பாடு என்பதை விட அது ஒரு முதலீட்டுச் செயற்பாடாகும் என்று கருத தொடங்கியமையாகும். பெருந்தொகையானவர்கள் எழுத்தறிவைப் பெற்றிடாத, கல்வி விரிவடையாத ஒரு சமூகத்தில் ஒரு கட்டம் வரை கல்வி ஒரு நுகர்வுச் செயற்பாடாக கருத முடியுமாயினும் அதற்கப்பாலும் கல்வியை ஒரு நுகர்வாக மட்டும் கருத முடியாது என்ற கருத்துக் கூறப்பட்டுள்ளது. கல்வியை மனித வளத்தின்மீது இடப்படும் ஒரு முதலீடாக கருதும் கல்விச் செயன்முறையைத் தயார் செய்து கொள்ள வேண்டும் எனப் பொருளியல் அறிஞர்கள் வலியுறுத்தியுள்ளனர். கல்விக்காக உள்ளிடப்படும் வளங்களில் இருந்து கூடுதலான பலன்களை பெற்றுக் கொள்வதே கல்வின் மிக முக்கியமான செயலாக இருக்க வேண்டும் என்ற கருத்து மேன்மேலும் பிரபலமடைந்தது. கல்வி ஒருவரின் தொழிற்றிறன்களை வளர்த்துக் கொள்ளவும் அதன் மூலம் அவனது உற்பத்தி திறனை விருத்தி செய்யவும் அவன் பெறும் பயன்களை அதிகரிக்கச் செய்யவும் அவனது வாழ்க்கைத் தரத்தினை உயர்த்தவும் உதவ வேண்டுமென்று வலியுறுத்தப்பட்டது.
கல்வியை ஒரு முதலீடாக கருதும்போது அதில் இடப்படும் வளங்களைச் சிக்கனமாகக் கையாள வேண்டும். விரயம், வீணாதல் ஆகியவற்றைத் தவிர்க்கவேண்டும். பரீட்சையில் தோல்வியடைதல், பயனற்றுப்போதல், கல்வியிலிருந்து விடுபடல், பாடவிதானம் மற்றும் கற்பித்தல் முறை ஒத்திராமை என்பன வளங்களை விரயம் செய்தல் எனக் கணிக்கப்படுகின்றமையால் அவற்றைத் தவிர்த்தல் முக்கியமானதாகும்.
கல்வியை ஒரு முதலீடாகப் பகுத்தாய்ந்தமையாலும் ஏற்றுக்கொண்டமையாலும் அதைப் பல நாடுகள் பொருளாதார அபிவிருத்திக்கு ஆதாரமாக அமைத்தக் கொள்ள முயற்சித்தன. அபிவிருத்தியடைந்த நாடுகளின் அபிவிருத்திக்கு கல்வி பெரிதும் பங்களிப்புச் செய்துள்ளது என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது. குறிப்பாக இரண்டாம் உலக மகா யுத்தத்தை தொடர்ந்து ஜப்பானில் ஏற்பட்ட துரித பொருளாதார அபிவிருத்திக்குக் காரணம் கல்வியின் ஊடாக மக்கின் திறன்களை விருத்தி செய்யப்பட்டிருந்தமையென எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. கல்வியின் மூலம் பொருதார அபிவிருத்தி நிச்சயமாக நடைபெறுகின்றது என்பதற்கு நான்கு காரணங்களை காட்ட முடியுமென பொருளாதார அறிஞர்கள் எடுத்துக் காட்டுகின்றார்கள். அவையாவன:
செல்வந்த நாடுகளில் ஏழை நாடுகளை விட அதிகமாக கற்றோர் இருக்கின்றமை. ஒரு நாட்டின் பொருளாதார அபிவிருத்தியை மூலதனத்தின் அளவைக்கொண்டு மட்டும் காட்டமுடியாதிருத்தல். மனிதர்கள் தாம் வாழும் காலத்தில் உழகை;கும் அளவைக் கணக்கிட்டுப் பார்க்கும்போது கற்றவர்களுடைய உழைப்பு கல்லாதவர்களுடைய உழைப்பினை விட அதிகமாக இருத்தலை கல்விக்காகச் செலவிடப்படும் அளவிடப்படும் அளவுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது உழைக்கும் பணம் சுமார் 10மூ வீத்திலிருந்து 30மூ வரை அதிகரிக்கின்றது என கணக்கிட்டுள்ளனர்.
அபிவிருத்தியினால் பொருளாதார அமைப்பில் ஏற்படும் மாற்றம் காரணமாக தேவைப்படும் பயிற்றப்பட்ட உழைப்பின் அளவின் அதிகரித்தலும் பயிற்றப்படாத உழைப்பின் அளவின் குறைதலும் என்றவாறு கல்வியை ஒரு முதலீடாக கருதத் தொடங்கியதால் கல்விக்கு வளங்களை இடுவதனால் கிடைக்கும் பயனும் தொடர்பும் மேலதிகக் காரணி (மீதிக்காரணி) பயன்கதி முதலிய பல்வேறு துறைகளில் கணக்கிடும் முயற்சிகள் ஏற்பட்டன.
கல்வியை ஒரு முதலீடாக கருதும்போது எழுகின்ற மற்றொரு முக்கியமான விடயம் பொருளாதார அபிவிருத்திக்கு முன்னால் கல்வி செல்கின்றது என ஏற்றுக்கொள்ளப்படுதல் ஆகும். கல்வியின் மூலம் பொருளாதார அபிவிருத்தி ஏற்படுகின்றது என்பதையும் ஏற்பட வேண்டும் என்பதையும் ஏற்றுச் செயற்படுவதாகும். கல்வி தேசிய செல்வத்தையும் தேசிய உற்பத்தியையும் அதிகரிக்கவும் தொழில் வாய்பை அதிகரிக்கவும் செல்வத்தை நியாயமான முறையில் பங்கீடு செய்யவும் ஆற்றல் பெற்ற ஒன்று என்பது இன்று பலராலும் ஏற்றுக் கொள்ளப்படுகின்றது. அதனால் கல்வி முன்னால் சென்று பொருளாதார அபிவிருத்தியை உருவாக்கித் தரவல்லது என்று கருதப்படுகின்றது.
கல்வி தனியாளுடைய தொழிற்றிறனை விருத்தி செய்தல், உற்பத்தி ஆற்றலை உயர்த்துதல், சமூகத்திலுள்ள வறுமையை ஒழித்தல், தொழிலில்லாமையை நீக்குதல், வருமானப்பங்கீடு வித்தியாசத்தைக் குறைத்தல் போன்ற பொருளாதார இலக்குகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு துணையாக உள்ளமையினைக் கொண்டு கல்விக்கும் பொருளதாரத்திற்குமிடையே நிலவும் தொடர்பினை அறிந்து கொள்ளக்கூடியதாக உள்ளது.
ஒரு தேவையான பயிற்றப்பட்ட உழைப்பைக் கல்வியின் மூலம் தயாரித்துக் கொடுக்கவேண்டியிருப்பதுடன் பொருளாதார அபிவிருத்திக்கு உதவக்கூடிய மனப்பாங்கையும் எண்ணங்களையும் மக்களுக்கு மத்தியில் தோற்றுவிப்பதும் கல்வியின் ஊடாகவே சாத்தியமாகின்றது.
அபிவிருத்தியடையும் நாடுகளில் பெரும்பாலும் காணப்படும் ஓர் இலட்சணம் வளப்பற்றாக்குறையை விட வள விரயமும் வீணாதலுமாகும். இந்நாடுகளில் பல்வேறு துறைகளில் இப்பண்பு காணப்படுகின்றது என்பது பல ஆய்வுகளில் இருந்து தெரியவந்துள்ளன. ஆகையினால் வளங்களை சிக்கனமாகப் பயன்படுத்தவும் வினைத்திறனுள்ளதாகப் பயன்படுத்திக் கொள்ளவும் நடவடிக்கையெடுக்க வேண்டியுள்ளது. அதன் பொருட்டு பழக்குவதும் ஊக்குவிப்பதும் கல்விக்குரிய மற்றுமொரு பொறுப்பு எனக் கருதப்படுகின்றது.
கைத்தொழில்மயமாக்கப்பட்ட பொருளாதார முறைக்கு சிறந்த உற்பத்தித் திறன்களும் உற்பத்தி நோக்குடைய உளப்பாங்குகளும் தேவை. இவற்றை வழங்கும் வகையில் கல்விச் செயற்பாடும் மாற்றமடைய வேண்டும். அத்துடன் கைத்தொழில்துறைத் தொழில்நுட்பம் துரிதமாக மாற்றமுற்றமையால் உழைப்பினர்கள் புதிய தொழில்நுட்ப சூழ்நிலைக்கேற்ப தம்மை ஈடு செய்ய வேண்டியிருந்தது. இச்சீரக்கப் பணியினையும் கல்வியே செய்யவேண்டியிருந்தது. கைத்தொழில்மயமாக்கம் மிகவும் நவீனமயமாக்கப்பட்டதும் உயர்தரமான தொழில்நுட்பக்கல்வி தேர்ச்சியுடையோரை உருவாக்கக் கூடிய மூன்றாம் நிலைக்கல்விநிலை மிக முக்கியத்துவம் பெறத் தொடங்கியது.
கல்வியையும் அபிவிருத்தியையும் தொடர்புபடுத்தி வெளியிடப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த கோட்பாடு மனித முலதனக் கோட்பாடாகும். இக்கோட்பாடு மக்களின் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்கு முறைசார்ந்த கல்வி அவசியமானதென வலியுறுத்தியது.
ஆய்வின்படி ஒட்டுமொத்த அளவில் கல்விமீது செய்யப்படும் முதலீட்டினால் பொருளாதார வளர்ச்சி ஏற்படும் என்பதற்கு விரிவான ஆய்வு ரீதியான ஆதாரங்கள் எடுத்துக் காட்டப்பட்டன. இவ்வாய்வாளர் 1973 தொடக்கம் 1985 வரை அறுபது நாடுகளில் கல்வி மீது செய்யப்பட்ட முதலீட்டின் படி வளர்முக நாடுகளில் ஆரம்ப பாடசாலைக் கல்வியின் விளைவு வீதம் 27 வீதமாக இருந்தது. இடைநிலைக்கல்விக்கான வதும் 16 ஆகவும் உயர்கல்விக்கான வீதம் 13 ஆகவும் இருந்தது.
ஜப்பான், கொரியா, ஜேர்மனி, சிங்கப்பூர் போன்ற நாடுகள் உயர்நுட்பவியல் தொடர்பான கல்வியில் அதிகம் முதலீடு செய்வதன் மூலம் உயர்ந்த பொருளாதார வளர்ச்சி வீதங்களை பெற்றதோடு, அவற்றை தக்கவைத்துக் கொள்ளவும் முடிந்தது. இத்தகைய துறைகளில் கவனம் செலுத்தாத நாடுகளும் இவற்றுக்கு அதிகளவு நிதி ஒதுக்க முடியாத நிலையில் உள்ள நாடுகளும் தொடர்ச்சியாக வெளிநாடுகளில் தங்கியுள்ளன. தமது ஊழிய படையினரை பயிற்றுவிக்க வெளிநாடுகளுக்கு அனுப்புகின்றன. நிபுணர்களை வெளிநாடுகளில் இருந்து அதிக செலவில் வரவழைக்கின்றன. இவ்வாறு பொருளாதார ரீதியில் அதிக இழப்புகளை எதிர்கொள்கின்றன.
இலங்கை ஓர் அபிவிருத்தியடையும் நாடு என்ற வகையில் கல்வியையும் காலத்திற்கு காலம் மாற்றியமைத்து பொருளாதார அபிவிருத்திக்கு சாதகமான நிலையினை ஏற்படுத்திக் கொள்ள முயற்சிகளை எடுத்துள்ளது என்பது யாவரும் அறிந்ததாகும். எனினும், எமது நாட்டின் கல்வி இன்னும் அபிவிருத்திக்கு கைகொடுத்து உதவவில்லையென பொதுவாகக் கூறப்படுகின்றது. நமது நாட்டின் கல்வி குடியேற்ற நாட்டுச் சட்டகத்திற்கு பொருத்தமானவாறு அமைக்கப்பட்டு மேலைத்தேயத்திலிருந்து வந்து மேலைத்தேயத்திற்கு சார்பான ஒன்று என விமர்சிக்கப்படுகின்றது.
நமது நாட்டின் கல்வி அடிப்படையிலேயே பரீட்சையை மையமானதாகக் கொண்டது. அதற்கேற்பவே கலைத்திட்டத்தை கற்பிக்கும் முறை பாடசாலை ஒழுங்கமைப்பு அதற்கேற்பவே அமைந்துள்ளன. கல்வி பாடசாலையோடும் பாடசாலை பரீட்சையோடும் பரீட்சைச் சான்றிதழோடும் சான்றிதழ் தொழிலோடும் தொழில சம்பளத்தோடும் என்றவாறு தொடர்புற்று உள்ளது. நூற்கல்வி சார்ந்த எமது கல்வியினால் உற்பத்திச் செயன்முறைக்கு கிடைக்கும் பங்களிப்பு மிகக்குறைவாகும். பாடசாலைகளினூடாக மாணவர்களுக்கு தொழில் சார்ந்ததாக அல்லது தொழிசல் பயிற்சியை வழங்கும் ஒரு வேலைத்திட்டம் இன்னும் தயாரிக்கப்படவில்லை.
நமது கல்வியில் வளவிரயம், வீணாதல் என்பவற்றை மிக அதிகமாகக் காணமுடியும். இலங்கையில் எழுத்தறிவு மட்டம் மிக உயர்வாக உள்ளதாக கணக்கிடப்பட்டிருந்த போதிலும் சிற்சில விசேட மக்கள் பிரிவினரின் எழுத்தறிவு மட்டம் குறைவானணது என பேராசிரியர் குணவர்தனா உள்ளிட்ட குழு செய்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சியர்ஸ் அறிக்கை (1971) கற்றவர்களுக்குத் தொழில்களை தேடிக்கொள்வது கல்லாதவர்கள் தொழில்களை தேடிக்கொள்வதை விடக் கஷ்டமானது எனக் கூறப்படுகின்றது. நமது உழைப்பு படையிணரில் பெருந்தொகையானோர் இன்னும் தொழிலின்றி இருப்பது ஓர் உண்மையாகும். பாடசாலை சமுதாயத்திற்கு எதிரான ஓர் இடம் என்ற நிலைக்கு உள்ளாகி இருப்பதுவும் தெரிகிறது. அதனாலேயே சமுதாயத்திலிருந்து பாடசாலையை பாதுகாப்பதற்குப் பல பாடசாலைகளுக்கு வேலைத்திட்டங்கள் தேவைப்பட்டுள்ளன. நமது நாட்டு கல்வி முறையும் பொருளாதார அபிவிருத்திக்கு சார்பானதல்ல என்பது தென்படுகின்றது. அதனால் கல்வியை அபிவிருத்திக்கு உகந்த, அபிவிருத்திக்கு ஒத்துழைப்பு வழங்குகின்ற ஒன்றாக அமைத்துக் கொள்ள வேண்டும்.
முடிவுரை
எனவே, கல்வியானது பொருளாதாரத்தின் மீதும் பொருளாதாரமானது கல்வியின் மீதும் ஒன்றிலொன்று தங்கியிருப்பதோடு மிக நெருங்கிய தொடர்புகளையும் கொண்டுள்ளது என்பதனை அறிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது.
0 comments:
Post a Comment